Monday, February 20

முஸ்லிம் சிவில் சமூகம் என்ற பெயரில் 120 நபர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை

 


முஸ்லிம் சிவில் சமூகம் என்ற பெயரில் 120 நபர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் 1990 ஒக்டோபரில் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலளிப்பதற்காக தமிழ் மக்களுக்கும் அவர்களின் சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்’ எனும் தலைப்பில் 71 தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளியிட்ட அண்மைய கூற்றானது மீளிணக்கச் செயல்முறையில் ஒரு முக்கியமான சமிக்ஞையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை அங்கீகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கையிலே சமாதானத்தினையும் சனநாயகத்தினையும் வேர்பிடிக்கச் செய்வதற்கு அந்த அறிக்கையானது பல பந்துரைகளை வழங்குகின்றது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
மேலும் அதில் மோதலினாலும் யுத்தத்திற்கு முன் நிகழ்ந்த இனக் கலவரங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் யுத்தத்தினால் கொல்லப்பட்ட, அங்கவீனமான மற்றும் இடம்பெயர்ந்த மனிதர்களின் அவலங்களை எமது அவலங்களாக உணர்வதற்கும் நாம் தவறிவிட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை முழுமையாக இங்கு தருகிறோம் .
குறிப்பு: குறித்த அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் பிரதான நிறுவங்கள் , இயக்கங்கள் , அதன் பிரதிநிதிகள் எவரும் தொடர்பு பட்டுள்ளதாக அறிய முடியவில்லை:
இருபத்தைந்து வருட யுத்தம் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதையும் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்துவதையும் உறுதிப்படுத்துவதில் இலங்கை பரந்த வீச்சிலான சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இடம் பெயர்ந்தவர்கள் பகுதியளவிற்குத் திரும்பி வருதல், போரினால் பாதிக்கப்பட்ட சமூதாயங்களுக்கு புனர் வாழ்வளித்தல், அத்தியாவசிய சேவைகளை மீளத் தொடங்கித் தரமுயர்த்துதல், தேர்தல்களை நடத்துதல், பெரும் அபிவிருத்திக் கருத்திட்டங்களை அமுல்படுத்துதல் போன் றவை உள்ளடங்கிய பல முனைகளில்
கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், யுத்தத்திலிருந்து நீடுறுதியானதும் அர்த்தபூர்வமானதுமான சமாதானத்திற்குத் திரும்புவதற்கு தடைகளாக இருக்கின்ற பல பிரச்சினைகள் களத்திலே தீர்க்கப்படாமலிருக்-கின்றன.
குறிப்பாக, மீளிணக்கத்திற்கான சவாலானது தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றது. இப்போது நாம் செயற்படுவதற்குத் தவறுகின்றமையானது, மோதலையும் அதன் தாக்கங்களையும். தீர்ப்பதற்கு சகல சமுதாயங்களுக்கும் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பினை இழப்பதற்கு வழிகோலும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், முன் செல்வதற்காக கூட்டுப் பொறுப்பினை எடுப்பதற்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளையும் செயல்முறைகளையும் வடிவமைப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள். அழைப்பு விடுக்கின்றோம்.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் மீளிணக்கம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஓரளவு முன்னெடுப்புக்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, மீளத்திரும்பிவருதல் மற்றும் நிர்மாணம் போன்ற செயல்முறைகள் கீழறுக்கப்படலாம். சிறுபான்மையாக இருக்கின்ற இடம்பெயர்ந்த சமூதாயத்தினர் வடக்கு மற்றும் கிழக்கிற்குத் திரும்பி வருவது அதிகரித்த அளவிற்குக் கடினமானதாக மாறியிருக்- கின்றது. திரும்பி வரும் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்கள் இவர்களை புறத்தாராக நோக்க எத்தனிப்பதுடன் இம்மக்களின் காணிகளையும் வளங்களையும் பறிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சிவில் சமூக செயற்படுனர்களும் கருணையற்றவர்களாகவும் உதவி செய்யாதவர்களாகவும் இருக்கின்றனர்.
1990 ஒக்டோபல் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலளிப்பதற்காக “தமிழ் மக்களுக்கும் அவர்களின் சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்’ எனும் தலைப்பில் 71 தமிழ் சிவில் சகப் பிரதிநிதிகள் வெளியிட்ட அண்மைய கூற்றானது மீளிணக்கச் செயல்முறையில் ஒரு முக்கியமான சமிக்ஞையாகும். கசப்பான கடந்த காலத்தை வெற்றி கொண்டு, கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, மீளிணக்கத்தினை நோக்கிய புதிய பாதையினை உருவாக்குவதற்கு எடுக்கப்படும் இந்த முயற்சிகள் தமிழ் முஸ்லிம் உறவினை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
தமிழ் சிவில் சகப் பிரதிநிதிகளின் இம் முயற்சியினை வரவேற்கின்ற அதேவேளை, முஸ்லிம் சிவில் சமூகம் என்ற ரீதியில் நாம் எம்மைச் சுய பசோதனை செய்துகொள்வது எமது கடமையாகும். யுத்தத்தின் போது முஸ்லிம்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளை அடையாளம் காணச் செய்வதில் முஸ்லிம் சமுதாயம் பல சிரமங்களை எதிர்நோக்கியது.
இலங்கை மக்களையும் கொள்கை வகுப்போரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் அடையாளம் காணச் செய்வதற்கும் முஸ்லிம்கள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்ட பிரச்சினைகளில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கிலும் வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, பாரிய இடப் பெயர்வு, காணிகளை இழந்தமை, மனித உமை மீறல்கள், சமாதானப் பேச்சு வார்த்தைகளிலிருந்து முஸ்லிம்கள் விலக்கிவைக்கப்பட்டமை போன்ற பிரச்சினைகள் சிலவாகும். எவ்வாறாயினும் எமது சொந்தக் கரிசனைகளை எழுப்புவதற்கு நாம் முயற்சிக்கையில், பாதிக்கப்பட்ட ஏனைய சமூகத்தினன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் தவறிவிட்டோம்.
மோதலினாலும் யுத்தத்திற்கு முன் நிகழ்ந்த இனக் கலவரங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் யுத்தத்தினால் கொல்லப்பட்ட, அங்கவீனமான மற்றும் இடம்பெயர்ந்த மனிதர்களின் அவலங்களை எமது அவலங்களாக உணர்வதற்கும் நாம் தவறிவிட்டோம்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை அங்கீகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம். இலங்கையிலே சமாதானத்தினையும் சனநாயகத்தினையும் வேர்பிடிக்கச் செய்வதற்கு அந்த அறிக்கையானது பல பந்துரைகளை வழங்குகின்றது.
இடம்பெயர்ந்தவர்கள் அவர்களின் சொந்த மண்ணிற்குத் திரும்புவதை வசதிப்படுத்துதல் முதற்கொண்டு தகவலுக்கான உரிமையினை அதிகப்படுத்துதல், அரசியல் தீர்வு பற்றிய கருத்தொருமிப்பினை ஏற்படுத்துதல், காணாமல் போதல் மற்றும் ஏனைய மனித உமைகள் தொடர்பாக விசாரணை நடத்துதல், மொழிக் கொள்கையினை அல்படுத்துதலை மேம்படுத்துதல் வரையான பல பிரச்சினைகளைத் தீர்த்தல் பற்றி அறிக்கை குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு மற்றும் வகைப்பொறுப்பு சார்ந்த விடயங்களைப் பூர்த்தி செய்தல் தொடர்பாக கணிசமான இடைவெளிகள் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். இந்தக் குறைபாடுகள் அறிக்கையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவற்றினைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தினைக் கோருகின்றோம். நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக்கூடிய, அல்படுத்தலைக் கண்காணிக்கின்ற பொறிறையினை உருவாக்குவதானது இது தொடர்பில் பயன்மிக்கதாகும்.
சிவில் சகப் பிரதிநிதிகள் என்ற ரீதியிலும் அரசியல் செயற்படுனர்கள் என்ற ரீதியிலும் நாம் இச் சவாலை ஏற்று யதார்த்தத்தினைப் புந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்குத் திடசங்கற்பம் பூண வேண்டும். இவ்வாறு செய்யத் தவறுகின்றமை, இன ரீதியான அரசியலுக்கும் பாகுபாடு மிகு சக நடைமுறைகளுக்கும் மோதலைச் சதா நிலைக்க வைப்பதற்கும் தீனி போடுவதாக அமைந்து விடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
எமது எதிர்வினையற்ற நிலைப்பாட்டினால், மோதலைத் தீர்ப்பதற்கும் பன்மை வாதம், சனநாயகம் மற்றும் நீதி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான ஒரு புதிய இலங்கையினைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு வரலாற்று வாய்ப்பினை நாம் இழந்து விடுவோம்.
அந்த அறிக்கையில் 120 பேர் கையெழுத்திட்டுள்ளனர் அவர்களில் சிலரின் விபரங்களை தருகிறோம்:
Dr.பர்ஷானா ஹனீபா-கொழும்பு பல்கலைக்கழகம், றிஷானா ஹனீபா-கொழும்பு. அஸ்ரா அப்துல்காதர்- கொழும்பு, M.அப்துல்காதர் – முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாசல் புதுக்குடியிருப்பு, K.A.M. அபூபக்கர்-அனைத்து விவசாய சங்கத்துக்குமான ஒன்றியம் மூதூர் A.C. அபூபக்கர்-முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாசல் கோணார்பண்ணை, M.அஹமட்நைனா-முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாசல் காட்டுபாவா ஜும்மாஹ் பள்ளிவாசல் எருக்கலம்பிட்டி, ஹில்மி அஹமட், ஷிபான் அஹமட்-கொழும்பு, M.H.M. அஜ்மீர்-மாத்தளை, M.S.அஜ்மியா PMA- சம்மாந்துறை, RM. அலிகான் -குசைனியா ஜும்மாஹ் பள்ளிவாசல் தாராபுரம். M.A.C.M.அமீன்-ஹிரா இஸ்லாமிக் வேக்கிங் அகடமி, A அமீர் அலி, M. அனிதா-பாலாவி மாதர் அபிவிருத்திச் சங்கம், A.S.அனுர்தீன், FM..S.அன்ஷர் மௌளானா-மருதனை, M.S.-அன்வர்-முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாசல் பெயரிகடை மன்னார், S.A.அஷ்ஹர்- முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாசல் கோணார்பண்ணை, U.L.F. அஷ்ரிபா-PMA சாய்ந்தமருது, S.H..அஷ்ரூப்- முகைதீன் ஜும்மாஹ் பள்ளிவாசல் – காட்டுபாவா முகைதீன் ஜும்மாஹ் எருக்கலம்பிட்டி, O.M.அஷ்ஹர்-அனைத்து மீனவர்களுக்குமான ஒன்றியம் மூதூர், L. அறுஷியா-மாதர் அபிவிருத்திச் சங்கம் கல்பிட்டி, A..அஷ்வினா-சம்மாந்துறை, Dr. U.L.A.அசீஸ். சமாதான நீதவான் மருதனை, S.F.பேகம்-பெண்கள் செயற்பாட்டு அமைப்பு திருகோணமலை, M.B.F. பிஸ்ரிலியா-யாழ் சமத்துவத்துவதற்கான சிவில் சமூகம், M.A.B.பிஸ்றியா- மூஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் புத்தளம், , சர்மிளா ஹனீபா-யாழ். சமத்துவத்துவதற்கான சிவில் சமூகம், அன்பெரியா ஹனிபா முஸ்லிம் பெண்களுக்கான ஆய்வு நடவடிக்கை மையம், M.M.ஹனிபா- கைதீன் யும்மா பள்ளிவாசல் பெயகடை மன்னார்,

No comments:

Post a Comment