Saturday, February 18

சிங்கள மொழிப்பெயர்ப்பில் அல்குர்ஆன் - விரிவுரையான தப்ஹீமுல் குர்ஆன்



[ Fri, Feb 17, 2012, 01:25 pm ]

சிங்கள மொழிபெயர்ப்பில் அல்குர்ஆன் விரிவுரையான தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம.சுக்ரியும் உரை நிகழ்த்தினர். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனரத்ன, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஹஸனைஸ் பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment