Friday, November 11

சாதாரண தரப் பரீட்சையின் போது தேசிய அடையாள அட்டை கட்டாயம்



எதிர்வரும் டிஸம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சையின் போது, ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்த மாணவர்கள் மாத்திரமே தபால் அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த திகதிக்கு முன்னர் பிறந்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தபால் அடையாள அட்டையுடன் பரீட்சைக்குத் தோற்றுகி்ன்ற மாணவர்களும் அதிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் பக்கங்களின் உறுதி செய்யப்பட்ட பிரதிகளை நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

பரீட்சை ஆரம்பமாகும் தினத்தன்று இந்த பிரதிகளை பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment