[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 12:14.30 AM GMT ]
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தமது செவனகல சீனித்தொழிற்சாலையை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாக வர்த்தகரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார்
இச்சட்டம் குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் அதன் பின் சர்வதேச நீதிமன்றிற்குச் செல்ல தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தொழிற்சாலை 2002ஆம் ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்ட போது, தான் அதைக் கொள்வனவு செய்யதாகவும் இதற்கான ஒப்பந்தத்தின் படி 700 ஊழியர்களை மீண்டும் பணிக்குச் சேர்த்ததுடன் 4500 கரும்பு உற்பத்தியாளர்களிடமிருந்து கரும்பை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் உடன்படிக்கையை மதித்து நடந்தேன். அரசாங்கம் 469ஹெக்டயர் நிலத்தை இருவருடங்களுக்கு முதல் இக்கம்பனிக்கு வழங்க தீர்மானித்திருந்தது. அது நடைபெறாததால் நான் நீதிமன்றம் சென்றேன்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஏப்ரல் மாதம் அதில் கையெழுத்திட்டார். நான் ஒப்பந்தத்திலுள்ளதை உடனடியாகச் செய்த போது அரசாங்கம் அதற்கு 9 வருடங்களை எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சீனித் தொழிற்சாலை முதலீட்டு சபையுடன் செயெ்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment