Sunday, November 13

மேலும் பல பெருட்களின் விலை அதிகரிக்கலாம்


Prof.Sirimal Abeyratne
  • PDF

  • எரிபொருள் விலை அதிகரிப்பினால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அதிகரிக்கப்பட்ட இவற்றினது விலை காரணமாக, இன்னும் சில வாரங்களில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கவுள்ளது.




    ஜனவரி முதல் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கவுள்ளது. முச்சக்கர வண்டிக்கான குறைந்த பட்ச கட்டணமும் அதிகரித்துள்ளது. தனியார் பஸ்கள் மற்றம் பாடசாலை வேன்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.
    பேக்கரி உரிமையாளர்கள்கூட விலை அதிகரிப்புப் பற்றி ஆலோசித்துவருகின்றனர்.
    ‘‘வாழ்க்கைச் செலவில் தெளிவான அதிகரிப்பு ஏற்படும் இதன் மூலம் உற்பத்தி, சர்வதேச வர்த்தகம், தொழில்வாய்ப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும்” என கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பொருளியல் பேராசிரியர் கலாநிதி சிரிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
    போர் முடிந்ததன் பின்னர் மக்கள் பொருளாதார நண்மைகளை அனுபவிக்கவில்லை மாறாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    No comments:

    Post a Comment