இலங்கையில் பாரிய இன முரண்பாடுகள் ஏற்பட ஆங்கிலேயர் கையில் இருந்து ஆட்சி பொறுப்பேற்கப்பட்டதன் பின் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமே காரணம் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள சந்திரிக்கா ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொழில் கல்வியின் சம உரிமை கோரிய தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்திற்கு பாரிய ஒரு தடையாக தனிச் சிங்களச் சட்டம் அமைந்ததாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தை சந்திரிக்கா குமாரதுங்க தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
சொர்க்க பூமி எவ்வாறு தொலைந்து போனது என்ற விடயத்தை இலங்கை தொடர்பில் அமெரிக்க மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் அடையாள அரசியல் கலாசாரம் நிலவிவருவதால் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment