Friday, November 18

காலி பாடசாலையில் முஸ்லிம் மாணவியர் பர்தா போட பௌத்த மதகுரு தடை

காலி - பலப்பிட்டி ரேவத்த மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்ந்தா அணிந்துவர பௌத்த மதகுரு ஒருவர் தடை விதித்துள்ளதாக அறியவருகிறது. பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்திற்கு முக்கிய பௌத்த மதகுரு ஒருவரே காரணமென்றும் தெரிவிக்கப்படுகிறது.


முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு முகத்தை மூடாமல் பர்தா அணிந்துசெல்ல கல்வியமைச்சு அனுமதியளித்துள்ளமையும், அதற்கான சுற்றுநிருபத்தை கல்வியமைச்சு பல வருடங்களுக்கு முன்னே வெளியிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது...

காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம், சிங்கள் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கின் எதிரொலியாகவே இந்நடவடிக்கை அமைந்திருக்கலாமென கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment