Friday, November 18

அநீதியான தீர்ப்பு! நிராகரிக்கிறேன்!!


ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் என வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான தீர்ப்பை நிராகரிக்கின்றேன் என்றார். இதேவேளை, பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


வெள்ளைக் கொடி விவகார வழக்கின் குற்றவாளியாக இனம்காணப்பட்ட முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவிற்கு இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீடு ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக பொன்சேகாவின் வழக்கறிஞர் நலின் லத்துவஹெட்டி தெரிவித்துள்ளார்.

.

No comments:

Post a Comment