Saturday, November 19

துனிசியா தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது


November 18, 2011.... AL-IHZAN World News

துனிசியா இடைத்தேர்தலில் அந்நாட்டின் மிதமான நாஹ்தா கட்சி மொத்தமுள்ள 217 இடங்களில் 89 இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளதாக துனிசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


அடுத்த ஆண்டு புதிதாக தேர்தல் நடத்தபடுவதையடுத்து இப்போது வென்றுள்ள அரசு இடைக்காலத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி காங்கிரஸ் குடியரசு கட்சி 29 இடங்களிலும், பாப்புலர் பெட்டிஷன் கட்சி 26 இடங்களிலும் வென்று முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளது...


புதிதாக பதவியேற்றுள்ள அரசு நவம்பர் 22 துனிசில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடஉள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக ஆண்டுவந்த ஜைனுல் ஆபிதீன் அரசு வெளியேறியதையடுத்து புதிய சட்டத்தை இந்த அரசு வரைவுசெய்யும்.


பொதுத்தேர்தல் நடைபெறும் வரை அதிகாரங்களை நிர்வகிக்கும் குழு ஒன்றையும் இந்த கூட்டத்தில் அமைக்க உள்ளனர்.

No comments:

Post a Comment