வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.போரினால்ரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வுஉடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே ஓமந்தை தொடக்கம் பளை வரையிலான தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 55 கி.மீ தூரமுள்ள தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான உடன்பாடு இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தத் தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகள் 2013ம் ஆண்டின் இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் யாழ்தேவி தொடருந்து காங்கேசன்துறை வரை சேவையை மேற்கொள்ளும்
|
No comments:
Post a Comment