[ சனிக்கிழமை, 19 நவம்பர் 2011
அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை கடுமையாக எதிர்ப்பதாகவும், இதனை கைவிட வேண்டும் என்றும் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இந்தியாவிற்கு அடி பணிந்ததாலேயே எமது நாடு சீரழிந்தது என்றும் அவர் கூறினார்.
அதிகார பரவலாக்கல் தொடர்பாக கூட்டமைப்புடன் பேசத் தயாரென அரசாங்கம் தெரிவித்துள்ளமை தொடர்பாக கேட்டபோதே டாக்டர் குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
60,000 படையினர் தமது உயிர்களை பலி கொடுத்து பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்தனர். ஆனால் அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது படையினன் உயிர் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகும்.
அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே உடனடியாக அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும்.
மக்கள் ஆணையை அரசாங்கம் மீறுமானால் நாம் மக்களை வீதியில் இறக்கி போராடுவோம். அதிகாரப் பரவலாக்கலுக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment