ஸ்ரீஜயவர்தனபுர, பல்கலைக்கழக மண்டபம் ஒன்றின் மேல் கூரையிலிருந்து ஐந்து குண்டுகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட கூரையைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டோரே இவற்றினைக் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.அங்கு விரைந்த பொலிஸார் ஐந்து குண்டுகளைக் கைப்பற்றினர். இந்தக் குண்டுகள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை,கூரையில் இந்தக் குண்டுகளை வைத்தோரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.(இக்னேஷியஸ்)
No comments:
Post a Comment