Saturday, November 19

வேலியே பயிரை மேய்ந்த கதை - பத்து வயதான சின்னத் தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயது பெரிய தேரர்

பத்து வயதான சின்னத் தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயது பெரிய தேரரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் புத்தக சிறிராகல உத்தரவிட்டுள்ளார்.10 வயதான தேரரை விஹாரைக்குள் மறைவிடம் ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என இவர்மீது குருநாகல் பொலிஸார் குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாலியல் துஷ்பிரயோகத்தின் போது சின்னத் தேரருக்குச் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது இவர் குருநாகல் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.(இக்னேஷியஸ்)

No comments:

Post a Comment