Wednesday, November 2

தந்தை செல்வா என்பவர் யார்? தெரியாதே என்கிறார் மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க!

 
[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 04:57.48 AM GMT ]
தந்தை செல்வநாயகம் என்பவர் யார்? அவரது சிலை உடைக்கப்பட்டதா? எனக்கு அவரைத் தெரியாதே! யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? இவ்வாறு இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க கேட்டுள்ளார்.
திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலை வரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத சிங்கள காடையர்களால் சேதமாக்கப்பட்டது.
இதனால் சிலையின் தலைப் பகுதி கொய்து வீசப்பட்டது.
இதுதொடர்பாக உங்கள் கருத்து என்னவென்று சுடரொளி பத்திரிகை ஆசிரியர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கிண்டலாக பதிலளித்துள்ளார்.
தந்தை செல்வநாயகம் யார்? தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டதா? ஐயோ, எனக்கு அவரைத் தெரியாதே? யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? எனக்கு இதுபற்றி தெரியாததால் கருத்துக் கூறமுடியாது என்று பதிலளித்தார் இலங்கை நாட்டின் மனித உரிமைகளுக்கு பொறுப்பான அமைச்சர்.

No comments:

Post a Comment