Tuesday, 1 November 2011
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகியவை முக்கிய நாடுகளாகும். இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகியவை எதிர்த்து வாக்களித்தன. பிரிட்டன், ஜப்பான் ஆகிய முக்கிய நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
பலஸ்தீனம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் யுனெஸ்கோவில் தனது அங்கத்துவத்தை நேற்று பெற்றுக்கொண்டது. பிரான்ஸின் பாரிஸிஸ் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 107 நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன மேலும் 52 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகியவை முக்கிய நாடுகளாகும். இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகியவை எதிர்த்து வாக்களித்தன. பிரிட்டன், ஜப்பான் ஆகிய முக்கிய நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
இதேவேளை யுனெஸ்கோவில் பலஸ்தீனத்துக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டமைக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “யுனெஸ்கோவில் பலஸ்தீனம் உறுப்பினராகியுள்ளதன் மூலம் ஒரு பலனும் ஏற்படாது. மாறாக அதனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முறியவே வாய்ப்புள்ளது” என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
மேலும் யுனெஸ்கோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதற்கு அளித்துள்ள நிதியை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதுடன் அமெரிக்காவும் அதற்கான நிதியை நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment