சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே விரிசல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக பல்கலைக் கழகங்களில் கற்கை மொழி ஆங்கிலமாக மாற்றப்படவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் கூறினார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் கூறினார்.
"நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் சிங்கள தமிழ் முஸ்லிம் என இனரீதியாக பிரிக்கப்பட கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம். அனைத்து மாணவர்களும் இணைந்து கல்வி கற்கும் பல்கலைக்கழக வலையமைப்பைக் கட்டியெழுப்புவோம்.
இலங்கையில் வாழும் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியோர். எனவே நாமனைவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடலாகாது. இதற்கு சிறந்த உதாரணம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுமாவர். பண்டாரநாயக்கவின் தாத்தாவின் பெயர் நீல பெருமாளாகும். இதனை மாற்றியே அவர் பண்டாரநாயக்கா என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். ஜே.ஆரின் கூற்றுப்படி அவரது தாத்தாவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்து ஜயவர்த்தன பரம்பரையில் திருமணம் செய்து கொண்டதால் ஜயவர்த்தன என்ற பெயர் வந்தது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் புலிகளே பல்கலைக்கழகங்களை நிர்வகித்தனர். அதேபோன்று தெற்கில் ஜே.வி.பி. யினரே பல்கலைக்கழங்களை நிர்வகித்தனர். ஆனால் இந்த நிலை இன்று மாறியுள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்கக் கூடிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகமென்பது இனவாதம் மதவாதம் கோத்திரவாதம் இல்லாத புத்திக்கூர்மையுடையோர் இருக்கும் இடமாகும். கிழக்குப் பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்படுவதாக கடந்த காலங்களில் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 'இஸட் ஸ்கோர்' பிரதேச இனவிகிதம் தொடர்பான வரையறைகளை பின்பற்றியே மாணவர்கள் பல்கலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆகவே வீண் புரளிகளுக்கு எவரும் இடமளிக்கக் கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment