துருக்கிய வரலாற்றில் முதல் தடைவயாக உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் சுல்தான்களில் ஓருவரான சுல்தான் முதலாம் அப்துல் மஜீதின் 150 ஆவது வருட ஞாபகார்த்த தினம் நவம்பர் 17 ம் திகதி அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு துருக்கிய பாராளுமன்றத்தின் தலைவர் செய்யித் ஜமீல் ஷெலீக் பணித்திருக்கிறார்.
இந்நிகழ்வில் சுல்தான் முதலாம் அப்துல் மஜீத் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற உள்ளன.
சுல்தான் முதலாம் அப்துல் மஜீதின் உஸ்மானிய சாம்ராஜ்ய கோஷங்களை சுமந்து வரும் இந்நிகழ்வு துருக்கியின் மதச்சார்பின்மைக்கு எதிரான கோஷங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. சுல்தான் முதலாம் அப்துல் மஜீத் 1823 - 1861 காலப்பகுதியல் வாழ்ந்தவர். அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 17 வயதில் ஆட்சி பீடம் ஏறினார்.
No comments:
Post a Comment