Thursday, November 17

லெபனான் அரசியல்வாதிகள் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்

[ Wednesday, 16 November 2011, 01:34.29 PM. ]
லெபனான் நாட்டின் அரசியல்வாதிகள் இருவர் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து மோதிக்கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அலவுஸ் மற்றும் சிரியாவின் பாத் கட்சியின் லெபனான் கிளையின் தலைவர் பாயஸ் சுகாருக்குமிடையிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது
சிரியாவில் நிலவும் சுமூகமற்ற அரசியல் சூழ்நிலை தொடர்பாக எழுந்த காரசாரமான விவாதமே இவ்வாறு மோதலாக உருவெடுத்துள்ளது.
சிரிய ஜனாதிபதி அசாட்டின் நடவடிக்கைதொடர்பில் விமர்சித்தமையும் இதற்கான காரணமாகக் கூறப்படுகின்றது
மேலும் இவ்விரு அரசியல்வாதிகளும் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுகார் கதிரையொன்றினைத் தூக்கித் தாக்க முயற்சித்துள்ளார்.
எனினும் பின்னர் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment