இம்மாதம் 19, 20 ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படவுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 80 கி.மீ. க்கும் – 100 கி.மீ. வேகத்திற்கும் இடையிலேயே வாகனங்களை செலுத்த வேண்டும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலக அறிவித்துள்ளார். இது 80 ஐ விடக் குறையவோ 100 ஐ விடக் கூடவோ இருக்கக் கூடாது. இந்த விதியை மீறுவோரிடம் இருந்து குறைந்தபட்சம் 5,000 ரூபா தண்டமாக அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் வேக எல்லை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என்கிறார் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல.
No comments:
Post a Comment