Wednesday, July 13

சுவிசர்லாந்தில் மீனாராக்களுக்கு எதிராக ஐரோப்பிய உரிமைகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிராகரிப்பு.




சுவிசர்லாந்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மீனாராக்களுக்கு எதிராக,சுவிசர்லாந்து முஸ்லிம்களை எதிர்க்கும் நோக்கில் அந்நாட்டு அரசியலமைப்பில்கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் தொடர்பாக,கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய உரிமைகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இரு வழக்குகளை அந்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 
'இவ்வழக்கை மனிதஉரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டடவர்களிடம் அவர்களின்உரிமையை, வழக்குத்தொடுத்தவர்களுக்கு கேட்க முடியாது'.என ஸ்டரஸ்பேர்க்கை தளமாக்கொண்டு இயங்கும் மனிதஉரிமைகளுக்கான ஐரோப்பியநீதிமன்றம் தெரிவித்துள்ளது.




புதியமினாராக்களை நிர்மாணிப்பதற்கு எதிராக சுவிசர்லாந்தில் 2009ம்ஆண்டு, அந்நநாட்டு மக்களிடையே வாக்கெடுப்பொன்று இடம்பெற்றது. இந்நடவடிக்கையை பல உலகநாடுகள் கண்டித்தன.என்பது குறிப்பிடத்தக்கது. புதியமினாராக்கள் நிர்மாணிக்கப்படுவதற்கு நிபந்தனைகள் அடங்கிய சட்டமொன்றை சுவிசர்லாந்தின் அரசியல்யாப்பில் கொண்டுவருவதற்கே, இவ்வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.மேலும் இவ்வழக்கின் போது, மினாராக்களை உருவாக்குவது,அவர்களுடைய அடிப்படை மதஉரிமைகளை மீறும்செயல் என எதிர்தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.எனினும் இதற்கான சரியான சாட்சியங்களை அவர் முன்வைக்கவில்லை.இதனால் இவ்வழக்கை ஸ்டரஸ்பேர்க் நீதிபதி நிராகரித்தார்.

No comments:

Post a Comment