
கல்விக்கும்,விஞ்ஞானத்திக்குமான இஸ்லாமிய அமைப்பானது,மதீனாநகரை 2013 ஆண்டுக்கான இஸ்லாமிய உலகின் கலாசாரத் தலைநகராக தெரிவுசெய்துள்ளது. இதனை ஜூலைமாதம் 11ம் திகதி திங்கட்கிழமையன்று மதீனாவின் இமாம் அப்துல் அஸீஸ் பின் மஜீத் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.மதீனாவானது ஹிஜாஸ் பிரதேசத்தில்,சவூதி அரேபியாவின் மேற்குப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.மேலும் அல் மதீனா மாகாணத்தின் தலைநகராகவும்,மதீனா நகரம் காணப்படுகின்றது.இது இரண்டாவது இஸ்லாமிய புனித நகராக விளங்குகின்றது.நபி(ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமும் இங்கு காணப்படுகின்றது.மேலும் அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் காணப்படுகின்றன.
2012ம் ஆண்டின் இஸ்லாமிய உலகின் கலாசாரநிலையங்களாக ஈராக்கின் நஜாப் நகரம்,நைஜீரியாவின்நயாமி நகரம் மற்றும் பங்களாதேஷின் டாக்கா நகரம் போன்ற இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.2010ம் ஆண்டின் இஸ்லாமியக் கலாசாரத்தலைநகராக யெமனின் தரீம் நகரானது, இஸஸ்லாமிய கல்வி கலாசார விஞ்ஞான அமைப்பினால் தெரிவுசெய்யப்பட்டது.
No comments:
Post a Comment