Wednesday, July 13

162மில்லியன் டொலர்களும் அதற்கான வட்டியையும் செலுத்தவேண்டும்-லன்டன்நீதிமன்றம்


இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் ஹெஜின் உடன்படிக்கைகமைய ஸடேன்டட் ச்சார்ட்ட வங்கிக்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தை செலுத்தாததால் அந்த வங்கிக்கு சுமார் 162 மில்லியன் டொலர்களையும் அதற்கான வட்டியையும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் வழங்க வேண்டும் என லன்டன் நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து ஸடேன்டட் ச்சார்ட்ட வங்கியின் பேச்சாளர்ல் ஒருவர் குறிப்பிடுகையில் தமது வங்கிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தமை தாம் மகிழ்வடைவதாக தெரிவித்தார். 


இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் சட்ட ஆலோசனை பெற்றுக்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

No comments:

Post a Comment