ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயின் தந்தை வழிச் சகோதரரும் குற்றமிழைப்போருடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக விமர்சிக்கப்பட்டவருமான அஹ்மத் வலி கர்சாய் நெருங்கிய நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தகாரில் இடம்பெற்ற இக்கொலை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அரச அதிகாரிகள் அவர் தனது பாதுகாப்பு அணியைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
கந்தகார் மாகாண சபையின் தலைவராக இருந்த வலி கர்சாய் இன்று (12.07.2010) காலை அவரது வீட்டில் இருந்த பொது தனது அன்புக்குரிய நண்பரும் அடிக்கடி சந்திக்க வருபவருமான சர்தார் முஹம்மத் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என பாதுகாப்பு செய்தி மூலம் ஒன்ரிநூடாகவும், மாகாண சபை உறுப்பினர் ஒருவராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அல் ஜசீராவுக்கு கருத்துத் தெரிவித்த தலிபான் பேச்சாளர், தாங்களே இக்கொலையைச் செய்வதற்காக நீண்ட காலத்துக்கு முன்னர் முஹம்மதை பொறுப்பாக்கியதாக தெரிவித்தார். எனினும் ஆப்கானிய ஆய்வுகள் தலிபான்கள் இவ்வாறு தமக்குத் தொடர்பற்ற விடயங்களுக்கு உரிமை கோருபவர்கள் என்றும், முஹம்மத் வலி கர்சாய்க்கு மிக நீண்ட காலமாக நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பில் அல் ஜசீராவுக்கு கருத்துத் தெரிவித்த ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயின் பேச்சாளர் வாஹித் உமர்: தெற்கில் வலி கர்சாய் ஒரு முக்கியஸ்தராக இருந்தார். எனினும் இக்கொலை தெற்கில் தலிபான்களுடனான சண்டை தோல்வியடைவதன் அடையாளமல்ல என்றார். மேலும் கருத்துத் தெரிவித்த இவர் இவ்வாறான கொலைச் சம்பவங்கள் எங்கும் இடம்பெறலாம் என்றும், தெற்கில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைவாதாக இது காட்டவில்லை என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு செய்தி மூலத்தின் தகவல்களின் படி முஹம்மத் வலி கர்சாயை வயிற்றிலும் நெஞ்சிலும் சுட்டதன் பின்னர் கர்சாயின் மெய்ப்பாதுகாவலர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனத் தெரிகிறது.
மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் காந்தகாரில் இடம்பெற்ற நல்லடக்கத்தில் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment