தென்சூடான் சுதந்திரநாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.மூன்று தசாப்தகாலமாக வடசூடானுடன்இடம்பெற்றுவந்த உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தென் சூடான் மக்களிடத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவின் படி, தென்சூடான் உலகில் புதிய நாடாக உருவாகியுள்ளது.உலகின் புதிய நாடாக உருவாக்கம் பெற்றுள்ள தென்சூடான் குடியரசானது,ஐக்கிய நாடுகள் சபையின்193வது அங்கத்துவத்துவம் பெற்ற நாடாக மாறியுள்ளது.முஸ்லிம் நாடாக இதுவரை விளங்கிய சூடான்,தற்போது வடசூடான்,தென்சூடான் என இரு நாடுகளாப்பிரிக்கப்பட்டுள்ளது.வடசூடான் முஸ்லிம் நாடாகவும்,தென்சூடான் கிறிஸ்தவ நாடாகவும் காணப்படுகின்றது.
தென்சூடானின் சுதந்திரதினத்தைதென்சூடான் மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு(ஜூலைமாதம் 9ம் திகதி 2011) கொண்டாடினர்.தென்சூடான் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தும், கிறிஸ்தவக்கோவில்களின் மணிகளின்மூலம்சத்தங்களை ஒலிபரப்பியும் தமது சுதந்திரதின மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.தென்சூடானின் முக்கியசுதந்திரவிழா இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.இதன் போது தென்சூடான் குடியரசின் தேசியக்கொடி அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன்,தென் சூடானின் முதல் ஜனாதிபதி ஸல்வாகீர் மூலம் தற்காலிகஅரசியலமைப்பு கையயெழுத்திடப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர்நாயகம் பன்கீமூன் மற்றும் சூடான் ஜனாதிபதி உமர் அல்பசீர் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வெள்ளிக்கிழமை தென்சூடான்தலைநகர் ஜூபாவிக்கு வருகைதந்துள்ளனர்.வட சூடானுடன் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தங்களின் மூலம் ஏறத்தாள 1.5மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். சூடானானது உலகநாடுகளில் அபிவிருத்தி மிகக்குன்றிய நாடாக் காணப்படுகின்றது.இங்கு ஐந்துவயதுக்கு உட்பட்ட ஏழு குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் சிசு மரணவிகிதம் காணப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதான உடன்படிக்கையானது 2005ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.இச்சமாதான உடன்படிக்கையானது,தென்சூடான் நாடு உருவாகக் காரணமாக அமைந்தது.மேலும் தென்சூடானுக்கு,வடசூடான் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment