Wednesday, July 13

தென் சூடான் ஜனாதிபதியின் மகன் இஸ்லாத்தை ஏற்றார்



செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011 12:53
கடந்த ஜூலை 09ம் திகதி அன்று சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்ட தென் சூடானின் ஜனாதிபதி ஸல்வா கீரின் மகன்களுள் ஒருவர் கடந்த வெள்ளியன்று புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பெருந் திரளான மக்கள் ஜும்ஆவுக்காக குழுமியிருந்த தலைநகர் கார்ட்டூமின் பள்ளிவாயல் ஒன்றிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதாக அந்நாட்டின் செய்திப் பத்திரிகையான அல் இன்திபாஹா செய்தி வெளியிட்டுள்ளது.



"நான் சுவர்க்கத்தில் ஆசை வைக்கிறேன். அதனாலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் மீண்டும் தென் சூடானுக்குச் சென்று அங்குள்ள மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன்" எனக் கூறினார் தென் சூடான் ஜனாதிபதியின் மகன் ஜோன் ஸல்வா.


புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதன் பின்னர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டுள்ள ஜோன் ஸல்வா தனது தந்தையான ஸல்வா கீரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

2011 ஜூவை 09ம் திகதி சூடானிலிருந்து பிரிந்த தென் சூடான்இ ஐ.நா.வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 193ஆவது சுதந்திர நாடாக மாறியுள்ள அதேவேளைஇ ஆபிரிக்காவின் 54ஆவது நாடாகவும் மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment