Thursday, July 7

தலைசிறந்த தமிழறிஞர், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார் தலைசிறந்த தமிழறிஞர், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்

தலைசிறந்த தமிழறிஞர், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்
July 7, 2011  07:52 am
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு 79 வயது. கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் அவரது கொழும்பு இல்லத்தில் காலமானார்.

கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட அவர் பேராதனை பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியதுடன் தமிழ் இலக்கிய பரப்பில் தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்தார்.

ஈழத்து முற்போக்கு இலக்கியம் குறித்த எந்த உரையாடலிலும் பேராசிரியர் சிவத்தம்பியை உள்ளடக்கியதாகவே அமையமுடியும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.


No comments:

Post a Comment