Thursday, July 7

தமிழ்ச்செல்வனின் கணினியில் கசிந்த தகவல்கள்: பொறியியலாளரைத் தேடி வலைவீச்சு!


 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கணினியில் இருந்து பல தகவல்களை இராணுவக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சு.ப.தமிழ்ச்செல்வனின் கணினியில் இருந்தே பல தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கணினியிலிருந்து புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலரது பெயர் விபரங்களும் மற்றும் அவர்களது தொடர்புகளையும் இராணுவத்தினர் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



மேலும் அந்தக் கணினியின் தொடர் இலக்கத்தை ஆராய்ந்ததில் அந்தக் கணினி கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிலேசில் வசித்த ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது எனவும், அவர் கொழும்பில் உள்ள ஒரு பிரபல செய்மதி தொடர்பாடல் நிறுவனத்தில் வேலை செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சமாதான காலப்பகுதியில் இவரே விடுதலைப் புலிகளிற்கு பெருமளவு செய்மதி தொடர்பாடல் சாதனங்களை தனது நிறுவனத்தினூடாக அனுப்பியுள்ளார் எனவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.



அந்நபரைத்தேடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வலைவீசி தேடி வருவதாகவும், நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் அவரை தேடி உள்ளதாகவும் அவர் தலைமறைவாகி வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment