Wednesday, July 6

கொலை வெறியில் அமைச்சர் மேர்வின்!




இலங்கையின் களனி தேர்தல் தொகுதியில் டெங்கு நோயால் எவரேனும் ஒருவர் இறப்பாராக இருந்தால் அம்மரணத்துக்கு காரணமாக இருக்கின்ற அலுவலரை படுகொலை செய்வார் என்று தெரிவித்து உள்ளார் மஹிந்த அரசின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா.

இவர் களனி தொகுதியைச் சேர்ந்தவர். இத்தொகுதியில் முன்னெடுத்து வருகின்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தபோதே இவ்வாறு கூறினார். டெங்கு மரணத்துக்கு காரணமான அலுவலரைப் படுகொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment