முஸ்லிம்
மத்ரஸா நிறுவனங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம்
முனைய வேண்டும் என்று பெளத்த கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பு
தெரிவித்துள்ளது அந்த அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கருத்தை நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .
தற்போது மாற்றுவழிமுறையில் இரண்டு அரச
சார்பற்ற அமைப்புகள் நாட்டினுள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.அதனூடாக ஹலால்
பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று வேறு விதமாக
விதைப்பதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கான ஒரு உதாரணமாக மத்ரஸா பாடசாலைகளை
கூறமுடியும். எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேசிய கொள்கையொன்றை
உருவாக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் யோசனை
தெரிவிக்கிறோம்.முன்னர் பள்ளிவாயல்களில் அறநெறி பாடசாலைகளை நடத்தினார்கள்.
தற்போது எல்லா இடங்களிலும் மத்ரஸா நிறுவனங்களை ஸ்தாபித்து பாடசாலைகளை
நடத்துகின்றனர். இதனை யார் நிர்வகிக்கின்றார்கள் ?.
பற்றைக்குள் தட்டினால் 30 அல்லது 40 என்ற
எண்ணிக்கையில் களைந்து செல்வதற்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களில்
ஒருவரேனும் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்திருக்கிறார்களா? ஒவ்வொரு
விதமான மதவாதங்கள் இவற்றில் கற்பிக்கப்படுகின்றன. அவையும் தற்போது
வகைப்படுத்தப்பட்டுள்ளன. என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment