முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையமாக இலங்கையில் திகழும்
மத்ரஸாக்களை தேசிய கல்விக் கொள்கைகளின் கீழ் கொண்டுவர வேண்டும்.
பாகிஸ்தானிலே தடை செய்யப்பட்ட மத்ரஸாக்களை முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத
சக்திகள் இலங்கையில் விஸ்தரிக்கின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தலான விடயமாகும் என்று பொது பலசேனா எச்சரித்துள்ளது.
உலமா சபையின் உண்மையான அடிப்படைவாத கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள
நிலையில், தற்போது சூறா சபை ஊடாக முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் செயற்பட
ஆரம்பித்துள்ளன. இச் சூறா சபைக்கு கட்டாரில் உள்ள முஸ்லிம்
அடிப்படைவாதிகளின் தீவிரமானவரான பூசுப் அல்- கர்லான் நிதி மற்றும்
ஆலோசனைகளை வழங்க உள்ளார். இவரை இலங்கையிலிருந்து குறிப்பிட்ட சிலர்
அண்மையில் போய் சந்தித்தும் உள்ளனர்.
இவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுபலசேனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது பலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறுகையில்,
முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை பொது பலசேனா முன்னெடுத்து
வருகின்றது. இதன் பிரகாரம் கடந்த காலங்களில் ஹலால் ஒழிப்பு செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் முழு அளவில் ஹலால்
நாட்டில் இருக்காது. உலமா சபையின் உண்மையான நிலையினை முஸ்லிம் சாதாரண
மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். இவர்கள் அப்பாவி முஸ்லிம் பெண்களின்
அனைத்து உரிமைகளையும் பறித்து வெறும் அடிமைகளாக்கும் நிலையே
காணப்படுகின்றது.
தற்போது உலமா சபையின் தோலைப் போர்த்திக்கொண்டு சூறா சபை செயற்பட
ஆரம்பித்துள்ளது. மத்ரஸாக்களில் சிறுவயது முதலே அடிப்படைவாத சிந்தனைகளை
முஸ்லிம் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து மோசமான பயங்க்ரவாதிகளாக்கும்
செயற்பாடே மத்ரஸாக்களில் நடைபெறுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய
கவனம் செலுத்த வேண்டும். ?? சட்டம் என்பது ரிசானாவின் கழுத்தை வெட்டிக்
கொன்றதை நியாயப்படுத்திய தொன்றாகும். இதனை காட்டுமிராண்டிகளே
அனுமதிப்பார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு அச்சட்டம் செல்லாது எனக்
கூறினார். vi
No comments:
Post a Comment