ரி.வி தெரண 360 சமூக-அரசியல் கலந்துரையாடல்
நிகழ்ச்சித் தொகுப்பாளினி டில்கா சமன்மலிக்கு தொடாராக தொலைபேசி அழைப்புகள்
மூலம் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலைத் தொடர்ந்து கொழும்பு
குற்றத்தடுப்பு பொலீஸாரிடம் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். 360
நிகழ்ச்சியில் கேள்விகளைக் கேட்டு பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர்
கலகொட அத்த ஞானசார தேரோவைக் குழப்பியதாக அடையாளம் தெரியாத தொலைபேசி
அழைப்பாளர்கள் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நிகழ்ச்சியில் குறித்த தேரர்
புத்தரின் போதனைகளுக்கமைவாக மதுபானம் அருந்துவதையும் சூதாட்டத்தில்
ஈடுபடுவதையும் கடுமையாகச் சாடினார். அத்துடன் தான் ஒரு தேரர் என்ற வகையில்
மதுபானம் அருந்துவதை முற்று முழுதாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
தேரர் இதனைக் கூறிக்கொண்டிருக்கையில்,
டில்கா நீதிமன்ற அறிக்கையொன்றை முன்வைத்தார் அத்துடன் குறித்த நீதிமன்ற
அறிக்கையின் குறிப்பிடப்பட்டிருந்த மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும்
சாரதி
அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனத்தைச் செலுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரமாரியாக கேள்வி எழுப்பினார்
எவ்வாறெனினும், ஞானசார தேரர் மாத்திரமல்ல
தெரண தொலைக்காட்சி உரிமையாளர் திலித் ஜயவீரவும் பாதுகாப்பு செயலாளரின்
நெருங்கிய நண்பர்களாவர்.அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனத்தைச் செலுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரமாரியாக கேள்வி எழுப்பினார்
No comments:
Post a Comment