தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் எதிர்காலம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
மாத்தளை மாநகர மேயர் ஹில்மி கரீமுக்கும் பள்ளிவாசல் நிர்வாக
சபைக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பள்ளிவாசலின் இருப்பு
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது பள்ளிவாசல் அதே இடத்தில் இருப்பதா? அல்லது வேறு இடத்தில் புதிதாக
நிர்மாணிப்பதா? என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை எட்டுமாறு
நிர்வாகிகள் மேயர் ஹில்மி கரீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகசபையும் பிரதேச முஸ்லிம்களும் பொறுமைகாக்கும் படியும்
ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வொன்றை விரைவில் பெற்றுத்தருவதாகவும்
ஹில்மி கரீம் இங்கு உறுதியளித்துள்ளார்
No comments:
Post a Comment