Wednesday, June 19

சிங்கள ராவைய பாதயாத்திரையில் கலந்து கொண்ட ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

டும்போக்கு சிங்கள ராவைய அமைப்பு தமது கொழும்பு நோக்கிய பாதயாத்திரையில் கலந்து கொண்ட ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 
மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் பாதயாத்திரையில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா வன்முறையற்ற அமைப்புஎன்ற குழுவின் தலைவர் அனுர சில்வா என்பவர் அவரின் வீட்டில் வைத்து ஒரு குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ராவையவின் அமைப்பாளர் சிங்கள வானொலி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவர் தங்கல்லை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பின்னர் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பின் மற்றுமொரு தேரர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் தங்கல்லை பொலிஸ் தெரிவித்துள்ள தகவலில் அனுர சில்வா என்பவர் தங்கல்லையில் இறைச்சிக் கடை தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரனைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

தங்கல்லை பிரதான வீதியில் உள்ள இறைச்சிக் கடை மீது நேற்று காலை பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இறைச்சிக்காக மாடுகளைஅறுக்கக் கூடாது எனக்கோரி மாடுகளை அறுப்பதை எதிர்த்து கத்திரகமயில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை செல்லும் குழுவினரே இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment