Sunday, June 23

எல்லா இடத்திலும் கசினோ சூதாட்டம் இல்லை ஒரு பிரதேசத்தை ஒதுக்கி அதில் மாத்திரமே – ஜனாதிபதி

11கசினோ சூதாட்ட நிலையங்கள் இலங்கைக்கு புதியதொன்றல்ல. முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ அவர்களின் காலத்தில் ஜோசிம் என்ற வெளிநாட்டவரின் மூலம் கசினோ சூதாட்டம் இலங்கைக்குஅறிமுகமானது.
எனது அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னரே கசினோ சூதாட்டம் இங்கு இருந்து வந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாசிரியர்களையும் அலரிமாளிகையில் சந்தித்த போது தெரிவித்தார். எனது அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு கசினோ சூதாட்ட நிலையத்திற்கோ, குதிரைப்பந்தய புக்கி சூதாட்ட நிலையங்களுக்கோ, மதுவிற்பனை நிலையங்களுக்கோ அனுமதி வழங்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
இன்று கசினோ நிலையங்கள் பல இடங்களில் செயற்பட்டு வருவது நாட்டுக்கு அழகல்ல. அதனால் சகல கசினோ சூதாட்ட நிலையங்களையும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி, அங்கு மாத்திரமே அதனை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதென்றும் ஜனாதிபதி கூறினார்.அன்று பாடசாலைகளுக்கு அருகிலும் கசினோ சூதாட்ட நிலையங்களும் மதுக்கடைகளும், புக்கி சூதாட்ட நிலையங்களும் இருந்தன. இப்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன
.
எல்லா இடத்திலும் கசினோ சூதாட்ட நிலையங்கள் இருப்பது பார்ப்பதற்கு நல்லதல்ல. அதனால் நாம் ஒரு பிரதேசத்தை ஒதுக்கி கசினோ சூதாட்ட நிலையங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அனைவருக்கும் இதுபற்றி நாம் அறிவித்துவிட்டோம். இவ்விதம் ஓரிடத்திற்கு சென்று சூதாட்ட நிலையங்களை நடத்துவதற்கு இணக்கம் காட்டாதவர்கள் பலவந்தமாக அவ்விடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கசினோ சூதாட்ட நிலையங்களுக்கு 5லட்சம் ரூபா வருமான வரியை செலுத்துமாறு அறிவித்திருந்தது. நாம் அந்தத் தொகையை பல மடங்கினால் அதிகரித்துள்ளோம் என்றும் கூறினார். இன்டர் கொன்டினென்டல் ஹோட்டலில் ஒரு கசினோ சூதாட்ட நிலையத்தினை நடத்தியது பற்றி தகவல் தெரிந்தவுடன் அரசாங்கம் அதனை உடனடியாக மூடிவிட்டதென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையில் வந்து பல்தேசிய நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்ய விரும்பும் போது அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதைப் போன்று சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள் எப்போதும் நாட்டுக்கு தீங்கிழைக்காத வகையில் செயற்பட வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, இன்றைய அரசாங்கங்கள் எடுத்த கடன்களையும் நாம் இப்போது திரும்பி செலுத்திக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம். அரசாங்கம் தனியாக செயற்படுவது கடினமான விடயம் என்றும் கூறினார்.தற்போது ஒன்லைன் கசினோ சூதாட்டமும் இலங்கையில் நடைபெறுகிறதென்றும் அங்கு கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.-தினகரன்

No comments:

Post a Comment