Monday, June 24

முஸ்லிம் காங்கிரசின் “அலுத்துப் போன” பழங்கதை !


அரசின் வேண்டாப்பெண்டாட்டி நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்பதையோ, முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய கடமைப்பாட்டையும் தவறி அரசுக்கு குடை பிடித்த கட்சியாகவே முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருகிறது எனும் உண்மையையோ, தேவையான தருணத்தில் கடமையாற்றத் தவறிய நிலையில் மக்களால் ஒதுக்கப்பட்டு வரும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது எனும் நிலையையோ மறந்த நிலையில், அரசுக்கு அவ்வப்போது வெளியோறுவோம், வெளியேறப்போகிறோம் என அச்சமூட்டி தமது காரியங்களை சாதிக்க முனையும் முஸ்லிம் காங்கிரஸ் ஏறத்தாழ முகத்தில் அறையப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் 29ம் திகதி கூடி அரசில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என முடிவெடுக்கப்போகிறோம் “நாடகம்” இடம்பெறப்போவதாக அக்கட்சியின் செயலாளர் ஹஸன் அலி வாய் கூசாமல் அறிக்கை விட்டிருக்கிறார்.
அரசில் இருந்து கொண்டே எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வழியிருந்தும் அதைச் செய்யாத கட்சி, அரசிற்கு வெளியிலிருந்தும் எதையும் செய்யப்போவதில்லை, அரசிற்குள் இருந்ததனால் தமக்கு வரையறை இருந்ததாகக் விளக்கம் கூறியவர்கள், தக்க தருணத்தில் வெளியேறாது தமது பதவிகளை தக்க வைத்துக்கொண்டார்கள் என்பன ஏற்கனவே வரலாற்றில் பதிவாகிவிட்ட விடயங்கள்.
அந்த நன்றி விசுவாசத்தில் தற்போது பஷீர் ஷேகு தாவுத் மஹிந்த புகழாரமும், ஹகீம் மெளனமும், ஹசன் அலி வாய்ச்சாடலுமாக முத்தரப்பு நாடகம், விரும்பியோ விரும்பாமலோ கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு  விட்டது, அதை அரசு நன்றாக அரங்கேற்றியிருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
உலகறிந்த இந்த பரகசியத்தை பதவி மோகத்தில் இருப்பவர்கள் என்றும் அறிய மாட்டார்கள்

No comments:

Post a Comment