நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும்
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் வடக்கு மாகாண
சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காது போனால், தான் அரசியலில் இருந்து
ஒதுங்க போவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வாசுதேவ
நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வரபோவதாக பொதுபல சேனா
அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை தொடர்பில்,
கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். தேசிய மொழிகள்
மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் கூறுவது போல் எமது அரசியல்
வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும். அவர் சிந்திப்பது போல், எமது உடல்
வாழ்வும் முடிவுக்கு வரவேண்டும் என்று கருதக் கூடும்.
|
தேர்தல் காலத்தில் இரத்தினபுரிக்கு வந்து எமது அரசியல் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டு வருமாறு நான் தேரருக்கு அழைப்பு விடுக்கின்றேன். 13வது
அரசியல் அமைப்புத் திருத்ததுடன் எப்படி வடக்கு மாகாண சபைத் தேர்தலை
நடத்துவார்கள் என்பதை பார்ப்போம் என ஞானசார தேரர் கூறியிருந்தார். 13வது
அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ்தான் வடக்கு மாகாண சபைத் தேர்தல்
நடக்கும் என நான் கூறுகின்றேன். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில்
இருப்பதை அப்படியே தொடர்ந்தால், தேரர் தனது காவி உடையை துறப்பாரா?. தனது
அமைப்பை கலைப்பாரா?. மாகாண சபை இல்லாதொழிக்கப்பட்டால், நான் அரசியல்
இருந்து ஒதுங்கி விடுவேன். அதேபோல் தேரரும் தான் காவியை துறக்க போவதாக
கூறவேண்டும்.
வார்த்தைகளில் பிதற்றினால் மாத்திரம் போதாது, காவிக்குள் ஒழிந்து கொண்டு
அவர் பேசுகிறார். அவர் மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
எனக்கும் அப்படி பேச முடியும். காவி உடையை மதித்து நாங்கள் அப்படி
பேசுவதில்லை. பொதுபல சேனாவுக்கு நோர்வே நாட்டிடம் இருந்து அணுசரணைகள்
கிடைத்து வருகின்றன. நோர்வே தூதுவர் எப்போதும் பொதுபல சேனாவின்
விகாரையிலேயே இருப்பார் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
|
Friday, June 21
13வது திருத்தம் அகற்றப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் - வாசுதேவ நாணயக்கார!
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment