Thursday, June 6

13ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் ஹக்கீம் காரசாரம்

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக அறியவருகிறது.
 
இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் தனது ஆட்சேபனையை முன்வைத்ததைத் தொடர்ந்தே அமைச்சர்களுக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
புதிய திருத்தங்கள் தொடர்பில் விரிவாக ஆராயாது அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனவும் அவற்றைத் தாமும் தமது கட்சியின் உயர்பீடமும் பரிசீலிக்க வேண்டும் எனவும் ஹக்கீம் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து இதுதொடர்பில் அமைச்சர்கள் சகலரும் தமது கருத்துக்களையும் அவதானங்களையும் முன்வைப்பதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் அடுத்த வாரம் இத் திருத்தங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அமைச்சர் ஹக்கீம் பலஸ்தீனிலிருந்து அவசரமாக நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment