முஸ்லிம் மற்றும் தமிழ் பகுதிகளின் நிர்வாக தேவைகளை நிறைவேற்றும் வகையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் தனி அலுவலகம் ஒன்று கல்முனையில் வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை கைப்பற்ற ஆதரவளித்தபோது இந்த கோரிக்கையை தனது கட்சி முன்வைத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கல்முனை அலுவலகத்திற்கு பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும் என்றுமு; அவர் கூறினார்.
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதால் தனது கட்சிக்கு வாக்களித்த மக்கள் வெறுப்படைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
'எமக்கு மக்களின் முன் செல்லசங்கடமாக உள்ளது' அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. நாம் அவர்களிடமிருந்து ஆணையை கோரினோம். அவர்கள் எமக்கு ஆணையை வழங்கினர். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உறுதியளித்த அரசாங்கத்துடன் சேர்ந்தோம்.
ஆயினும், அரசாங்கம் எமக்கு அளித்த வாக்குறுதிகளை அலட்சியம் செய்து வருகின்றதுடன் இங்கு கடுமையான நிலப்பிரச்சினை உண்டு என்றுமு; அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment