புத்தர் சலை வைக்கப்படவுள்ள பிரதேசம் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்படும் இந்த
புத்தர் சிலை வைப்பு நிகழ்வில் பெருமளவு பௌத்த பக்தர்கள் கலந்து
கொள்வார்கள் என பொதுபல சேனாவின் இணைப்பாளர் அலுத்வௌ ஆநந்த தேரர்
குறிப்பிட்டுள்ளார்.
கோட்டபய ராஜபக்ஸ தலைமையில் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாக சபை, தொல்பொருள்
ஆராய்சி திணைக்கள அதிகாரிகள், பௌத்த குருமார், ஆகியோருக்கிடையில்
அண்மையில் கூரகல்ல பகுதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது
குறித்த பகுதியில் எவ்வித புதிய நிர்மமானங்களுக்கு அனுமதி
வழங்கப்படமாட்டாதென உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment