(Vi) புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே, தாம்
உள்ளிட்ட பிக்குகள், வெளிநாடு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நோர்வே பிரஜை ஒருவரின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும்
புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமது அமைப்புக்கு பெரும்
தேவை இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான
அறிவுறுத்தல்களுடனேயே தமது அமைப்பின் பிக்குமார் அமெரிக்காவுக்கு
சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு வெளியில் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் இருப்பதாகவும்
துரதிஷ்டவசமாக அவர்கள் இலங்கை சமூகத்திற்குள் இல்லை எனவும் ஞானசார தேரர்
தெரிவித்துள்ளார்.
போரில் வெற்றியோ தோல்வியோ இல்லை என்பதால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து
நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை தமக்கு இருப்பதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் முதல் நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள்
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் ஜெனிவாவுக்கு
சென்றும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அது ஜனநாயக உரிமை எனவும் தேரர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment