Sunday, May 5

மாலைதீவில் அமெரிக்க இராணுவ முகாம்; இலங்கைக்கு ஆபத்து - சம்பிக்க

 
மாலைதீவில் அமெரிக்க இராணுவ முகாமொன்று அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு இராணுவ முகாம் அமைப்பதனால் இலங்கை உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
இந்து சமுத்திரத்தை கண்காணிப்பதற்கு இந்த இராணுவ முகாம் வழியமைக்கும். பிராந்திய வலயத்தின் சீனத் தலையீடுகளை முறியடிக்கும் வகையில் இவ்வாறு அமெரிக்கா, மாலைதீவில் முகாம் அமைக்கிறது. 
 
1980களில் அமெரிக்கா இலங்கையில் முகாம் அமைக்க முயற்சி செய்தாகவும், அதனை தமிழீழ விடுதலைப் புலிகளை பயன்படுத்தி யுத்தத்தை ஏற்படுத்தி இந்தியா முறியடித்தது.
 
அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் போன்றன குறித்த முகாமில் நிலைநிறுத்தப்படும் எனவும் இது ஒட்டு மொத்த பிராந்திய வலயத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்..

No comments:

Post a Comment