குவைத்திற்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,
இடைநடுவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக
நாடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து சற்றுநேரத்திற்கு முன்னர் தாம் சீ.ஐ.டி. உயர் அதிகாரிகளுடன்
தொடர்புகொண்டு உரையாடியதாகவும், இதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுடன் தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் அமைச்சர்
றிசாத் மேலும் கூறினார்.
அதேநேரம் அகில இலங்கை முஸ்லிம் கங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் தற்போது
நடைபெறுவதாகவும், இக்கூட்டத்தின் ஆஸாத் சாலியின் கைது தொடர்பில்
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுமெனவும் அமைச்சர்
றிசாத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment