ஜனாதிபதியும்
நானும் பொறுப்புகளில் இருக்கும் நிலையில் ஆசிரியைகளுக்கு சீருடை என்ற
பேச்சுக்கே இடமிருக்காது என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஆசிரியைகளுக்கு சீருடையொன்று
வடிவமைக்கப்பட வேண்டுமென கல்வியலாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை தொடர்பாகக்
கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இது தொடர்பாகக் கருத்து
வெளியிட்ட அவர், இந்த நாட்டிலுள்ள ஆசிரியைகள் ஒழுக்கம் பண்பாட்டுடன்
கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இப்போது ஒழுக்கமான உடையினையே
அணிகின்றனர். அவர்களுக்குப் புதிய சீருடையொன்று அவசியமில்லை.
ஆசிரியைகளின் சீருடையினை
மாற்றியமைப்பதற்கு இந்தக் கல்வியியலாளர்களுக்கு பைத்தியமா
பிடித்திருக்கிறது. ஜனாதிபதி பதவியிலிருக்கும் வரையிலும் நாக்
கல்வியமைச்சராக இருக்கும் நிலையிலும் ஆசிரியைகளின் புதிய சீருடை
முயற்சிக்கு இடமளிக்கப் போவதில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஏறத்தாழ 2,38,000 ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுள் இரண்டு இலட்சம் பேர் ஆசிரியைகளாவர்.
ஆசிரியைகளுக்கான புதிய சீருடை குறித்த
ஆலோசனைகளை கல்வியலாளர்கள் சிலர் தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு முன்
வைத்திருந்தனர். இதுபற்றி மக்களிடம் கருத்துப் பெறப்படுமென தேசிய கல்வி
ஆணைக்குழு அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment