இரகசிய
பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலியின் உடல்நிலை
கவலைக்கிடமாக இருப்பதினால் அவரை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க
நடவடிக்கை எடுக்குமாறு அவரது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இன்று
திங்கட்கிழமை இரகசியப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளருக்கு கோரிக்கை
விடுத்துள்ளார்.
இன்று நண்பகல் சட்டத்தரணி அஸாத் சாலியை
சந்திக்கப் சென்றபோது, இருவரால் தூக்கிக்கொண்டு வரப்பட்டே அவர்
சட்டத்தரணிக்கு காட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டது முதல் உண்ணாவிரதம்
இருக்கும் அஸாத் சாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்தார்.
அஸாத் சாலி இன்று 4 மணியளவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment