31.03.2013 இன்று முற்பகல் 9.00
மணியளவில் புத்தளம் கலாச்சார மண்டபதில் டாக்டர் இல்லியாஸ் அவர்களின்
ஏற்பாட்டில் ஈரான் தூதுவர் உடனான ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் புத்தளத்தைச் சேர்ந்த பல பெண்கள் அமைப்புகள் பங்குபற்றின. டாக்டர்
இல்லியாஸ் அவர்கள் அறிமுக உரையில் 1990 களில் ஈரானிய பெண்களின் வருகை,
ஹிஜாப் அறிமுகம், பாடசாலைகளில் பர்தா முறை அனுஷ்டிக்கப்பட்டு வருவதும்,
அதற்கான விழிப்புணர்வு தற்போதை பாத்திமா மகளிர் கல்லூரியில் அப்போது இடம்
பெற்றதையும் நினைவு கூர்ந்தார்.
ஈரானியத் தூதுவர் உரையில் ஹிஜாப்பின்
தற்காலிக நிலையும் அதனை பேணுவதில் முஸ்லிம் பெண்களின் பங்கும்
தேவைப்பாடும், இப்படியான விடயங்களை முன்வைத்ததோடு இலங்கை வாழ்
முஸ்லிம்களுக்காக அரசுடன் இணைந்தும் தனியாகவும் நிறைய உதவிகளை செய்து
வருவதாகவும் தெரிவித்த அவர் பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பொருளாதார
தடைகளுக்கு மத்தியிலும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு உதவுவதாக கூறினார்.
அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி அவர்கள் தமது
உரையில் புத்தளம் மக்களிலும் அநேகமானோர் மிகவும் வறிய நிலையில் இன்றும்,
இன்னும் உள்ளதாகவும் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதோடு
புலமைப்பரிசில் முறைகள் மூலம் கல்வி அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டு
வருகைக்கு நன்றியையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment