Sunday, April 7

ஆறு மாடிக் கட்டிடம் நான்கு மாடியான பயங்கரம்

ஆறு மாடிக் கட்டிடம் நான்கு மாடியான பயங்கரம்


April 7, 2013  12:49 pm
கொழும்பு, கோட்டை, மலிபன் சந்தியில் அமைந்துள்ள ஆறு மாடிகளைக் கொண்ட வியாபார நிலையம் ஒன்றின் முதல் கீழ் மாடிகளும் உடைந்து விழுந்துள்ளது.

எனினும் மேல் மாடிகள் நான்கிற்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அந்த நான்கு மாடிகளும் கீழ் இறங்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு வருடம் மட்டுமே பழமையான இந்த கட்டிடத்தின் கீழ் இரு மாடிகளும் உடைந்து நொருங்கியுள்ளன.

கீழ்ல் மாடிகள் உடைந்து விழும் போது மேல்மாடிக் கட்டிடத்திலுள்ள மாபிள் துடைந்துள்ளது.

இதன் காரணமாக அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த இடத்தை விட்டு வெளியேறியமையின் காரணமாக உயிர்பிழைத்துள்ளார்.

இந்த கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் மற்றுமொரு கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள வேளையிலேயே இந்த கட்டிடம் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment