Wednesday, April 3

முஜீபுர் ரஹ்மானை கைது செய்யுமாறு பௌத்த அமைப்பு வலியுறுத்து


ஐக்கிய தேசியக் கட்சியின் முஜீபுர் ரஹ்மானை கைது செய்யுமாறு சிங்கள பௌத்த மத அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முஜீபுர் ரஹ்மான், சிங்கள மக்களுக்கு எதிராக போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகத் சிங்கள பௌத்த மத அமைப்பு தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தில் கடும்போக்குடைய முஸ்லிம் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும்  அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாக முஸ்லிம் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment