அமெரிக்கா, கலிபோர்னியாவில்
அமைந்திருக்கும் ஸ்ரீ ரதன விஹாரையில் பொது பல சேனா பிக்குகள் மூவரும்
தங்குவதை நிர்வாகம் எதிர்ப்பதாக அறிக்கை வெளியாகியிருந்த நிலையில் எந்த
வித தங்கு தடையும் இன்றி திட்டமிட்டபடியே போதி பூஜையை நிறைவேற்றிவிட்டு
விஹாராதிபதி சுமன தேரோவோடு வேறு விஹாரைகளை சுற்றி பார்க்க
கிளம்பியுள்ளார்கள் BBS கடும் போக்காளர்கள்.
திட்டப்படி தொடர்ந்தும் விஹாரையிலேயே
அவர்கள் தங்குவார்கள் என்பதையும் உறுதி செய்த விகாரை நிர்வாக உத்தியோகத்தர்
ஹேமானந்த, நாளைய தினம் அவர்கள் தமது விஹாராதிபதி சுமன தேரோ சகிதம்
இந்தியானாவுக்கு செல்வதாகவும் எம்மிடம் தகவல் வழங்கினார்.
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் மேலும்
கருத்து வெளியிட்ட அவர்: பொது பல சேனா பிக்குகள் பௌத்த துறவிகள் எனவே
அவர்கள் இங்கு வருகை தரும் போது அவர்களுக்கான தங்குமிடம் உட்பட அனைத்து
உதவிகளையும் செய்து கொடுப்பது எங்களது கடமை. அதில் விஹாராதிபதி சுமன தேரோ
தெளிவாக இருக்கிறார் என்றும் எடுத்துக் கூறினார்.
யார் என்ன கூறினாலும் சுமன தேரோ எடுக்கும்
முடிவுகளே இங்கு இறுதியானது என்றும் சுட்டிக்காட்டிய அவர் பொது பல சேனா
பிக்குகளுக்கு தாம் தொடர்ந்தும் அனைத்து உதவிகளையும் செய்து
கொடுக்கப்போவதாகவும் தெரிவித்தார் .
No comments:
Post a Comment