முஸ்லிம்களுக்கெதிராக இன்று நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு
பெரும்பாலான பெளத்தர்கள் உடந்தை இல்லை. எனவே பெளத்தர்கள் உட்பட ஏனைய
சமயத்தவரும் முஸ்லிம் கலாசார உடை அணிந்து முஸ்லிம்களுக்கு எதிரான
வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என சுமந்திரன் எம்.பி.
தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சுமந்திரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று நாட்டில் ஒவ்வொரு நொடியும் வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டே
இருக்கின்றது. பெபிலியான வர்த்தக நிலைய களஞ்சியசாலை மீதான தாக்குதல்
நடைபெறும்போது பொலிஸார் அதனைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். இது
மட்டுமல்ல, நடைபெறும் வன்முறைகள் அநேகமாக அரசாங்கத்தின் அனுசரணையோடு
பொலிஸ், இராணுவத்தின் ஆதரவோடு தான் நடைபெறுகிறது.
இன்று முஸ்லிம்களுக்கெதிராக பல வகையிலும் வன்முறைகளைத் தொடர்கிறார்கள்.
முஸ்லிம்களின் கலாசார உடைகளையும் கழட்டி எறிவதற்கு எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் வேறு சமூகம் வாழமுடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால்
இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு பெரும்பாலான பெளத்தர்களுக்கு உடன்பாடில்லை.
ஆகவே பொதுபலசேனா போன்ற அமைப்புக்களின் இனவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால்
சிங்கள மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு அவர்களின் கலாசார உயை அணிய முடியாத நிலை ஏற்படுத்தினால்
சிங்களவர்கள், தமிழர்கள் என சகலரும் முஸ்லிம் கலாசார உடையை அணிந்து அதற்கு
எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். |
No comments:
Post a Comment