அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிக்க மாட்டார் என்று மீண்டும் ஆணித்தரமாக
கூறி உள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
இவர் ஆங்கில இணையம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இதை வலியுறுத்தி உள்ளார்.
தற்போதைய முறைமையை மாற்றி அமைக்க முயல்கின்ற பொதுவான அணிக்கு பேராதரவு
வழங்குவார் என்றும் ஆனால் இவ்வணியில் எவ்வித பதவிகளையும் ஏற்க மாட்டார்
என்றும் கூறி உள்ளார்.
நீதித் துறையின் மிக அவசியம் என்றும் அவரது காலத்தில் நீதித் துறையின்
சுதந்திரத்தை பாதுகாக்கின்றமைக்கும், உறுதிப்படுத்துகின்றமைக்கும் உரிய
நடவடிக்கைகள் எடுத்தார் என்றும் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment